வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து ? நாளை 2-வது ஒருநாள் போட்டி


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து ? நாளை 2-வது ஒருநாள் போட்டி
x

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆன்டிகுவா,

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

முதலாவது ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்குமா? என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தீவிர முனைப்புடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


Next Story