மகளிர் கிரிக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு..!


மகளிர் கிரிக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு..!
x

Image Courtesy: @BCCIWomen

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நவிமும்பையில் நடைபெறுகிறது.

மும்பை,

அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது.

இந்த தொடரின் முதலாவது போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story