பெண்கள் டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது? - இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்...!


பெண்கள் டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது? - இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்...!
x

Image Courtesy: AFP 

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

கேப்டவுன்,

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

'ஏ' பிரிவில் நியூசிலாந்து (4 புள்ளி) 3-வது இடமும், இலங்கை (4 புள்ளி) 4-வது இடமும், வங்காளதேசம் (0) கடைசி இடமும், 'பி' பிரிவில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் (4 புள்ளி) 3-வது இடமும், பாகிஸ்தான் (2 புள்ளி) 4-வது இடமும், அயர்லாந்து (0) கடைசி இடமும் பெற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

நேற்று நடந்த முதலாவது அரையிறுதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 173 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. இதில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.



Next Story