கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கால்இறுதியில் ரியல் மாட்ரிட் அணி + "||" + Real Madrid team in the Champions League football quarter

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கால்இறுதியில் ரியல் மாட்ரிட் அணி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கால்இறுதியில் ரியல் மாட்ரிட் அணி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி கால்இறுதிக்கு தகுதி.
பாரீஸ்,

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாரீஸ் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது ரவுண்டின் 2-வது கட்ட சுற்றில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)- பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) கிளப் அணிகள் மல்லுகட்டின. விறுவிறுப்பான இந்த மோதலில் ரியல் மாட்ரிட் கிளப் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியில் கிறிஸ்டியானா ரொனால்டோ, காஸ்மிரோ தலா ஒரு கோல் அடித்தனர். ஏற்கனவே முதலாவது லீக்கிலும் ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து 2 ஆட்டங்களின் முடிவில் ரியல்மாட்ரிட் அணி 5-2 என்ற கோல் கணக்கில் கால்இறுதியை எட்டியது.