கால்பந்து

உலக கோப்பைக்குள் குணமாகிவிடுவேன் - நெய்மார் + "||" + Recovered into the World Cup I will - Neymar

உலக கோப்பைக்குள் குணமாகிவிடுவேன் - நெய்மார்

உலக கோப்பைக்குள் குணமாகிவிடுவேன் - நெய்மார்
உலக கோப்பைக்குள் குணமாகிவிடுவேன் என நெய்மார் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரேசில்,

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார், பாரீஸ் செயன்ட் ஜெர்மைன் கிளப் அணிக்காகவும் விளையாடுகிறார். கடந்த பிப்ரவரி மாதம் கிளப் போட்டியில் ஆடிய போது நெய்மார் கால் பாதத்தில் காயம் அடைந்தார். உடனடியாக தாயகம் திரும்பிய அவருக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது. காயத்தில் இருந்து குணமடைந்து வரும் நெய்மார் கூறுகையில், ‘காயம் மோசமானது தான். ஆனால் தற்போது ஓய்வு எடுத்து வருவதால் தேறி வருகிறேன். ரஷியாவில் ஜூன் மாதம் தொடங்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்குள் நான் முழுமையாக தயாராகி விடுவேன்’ என்றார். மே 21-ந்தேதி தொடங்கும் தேசிய அணிக்கான பயிற்சி முகாமில் நெய்மார் பங்கேற்பார் என்று தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும்; சீனா நம்பிக்கை
நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறிய நிலையில் அங்கு அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
2. பாலியல் பலாத்கார புகார்: தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி செய்கிறார் ரொனால்டோ மறுப்பு
பாலியல் பலாத்கார புகார்: தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி மேற்கொள்கிறார் என ரொனால்டோ குற்றஞ்சுமத்தியுள்ளார்.
3. “இந்திய அணியினர் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்” - ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்
இந்திய அணியினர் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. தாய்லாந்து சிறுவர்கள் கால்பந்து இறுதி போட்டியைக் காண அழைத்து வரப்படமாட்டார்கள்: பிபா தகவல்
தாய்லாந்து சிறுவர்கள் கால்பந்து இறுதி போட்டியைக் காண அழைத்து வரப்படமாட்டார்கள் என்று பிபா தெரிவித்துள்ளது. #FIFA
5. உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்
ஜெர்மனி, பிரேசில் ஆகிய அணிகள் தடையை கடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.