கால்பந்து

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் : இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி + "||" + SAFF Championship: Sunil Chhetri Brace Helps India Beat Maldives 3-1 And Enter Final

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் : இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் : இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி
இந்திய அணி கேப்டன் சுனில் சேத்திரி இரண்டு கோல்கள் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்
மாலத்தீவு

13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

வங்காளதேச அணியுடன் நடந்த முதல் போட்டியும்  இலங்கை அணியுடன் நடந்த இரண்டாவது போட்டியும்  சமனில் முடிந்த நிலையில் நேபாள அணியுடன் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில்  நடப்பு சாம்பியன் மாலத்தீவு அணியை நேற்று  எதிர்கொண்டது.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-1 என்ற கணக்கில் மாலத்தீவு  அணியை வீழ்த்தியது.ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் மன்வீர் சிங்க் முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக மாலத்தீவு அணி வீரர் அலி அஷஃபாக்  45வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்திரி இரண்டு கோல்கள் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் மாலத்தீவு  அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

16 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இந்திய அணி நேபாள அணியை எதிர்கொள்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் நேற்றை விட 19.99 சதவீதம் உயர்ந்த கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,987 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் இன்று கொரோனா பாதிப்பு சற்று உயர்வு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,823 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் விரைவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனை
இந்தியாவில் விரைவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனை தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4. இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 14,313 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு முதன்முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது.
5. தெற்காசிய கால்பந்து: இந்திய அணிக்கு முதல் வெற்றி
13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்து வருகிறது.