பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: இந்தியா-ஈரான் போட்டி 'டிரா'


பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: இந்தியா-ஈரான் போட்டி டிரா
x
தினத்தந்தி 20 Jan 2022 4:24 PM GMT (Updated: 2022-01-20T21:54:09+05:30)

12 அணிகள் பங்கேற்கும் பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மும்பையில் இன்று தொடங்கியது.

மும்பை,

பெண்களுக்கான 20-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மராட்டியத்தில் இன்று தொடங்கி வருகிற 6-ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள மும்பை, நவிமும்பை, புனே ஆகிய நகரங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில்  'ஏ' பிரிவில் உள்ள அணிகள் மோதின. முதலாவதா நடைபெற்ற ஆட்டத்தில் சீனா மற்றும் சீனதைபே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் சீனதைபே அணியை வீழ்த்தி சீனா வெற்றி பெற்றது.

மேலும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஈரான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்காத நிலையில் 0-0 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

Next Story