ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மும்பை - கோவா அணிகள் ஆட்டம் டிரா..!


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; மும்பை - கோவா அணிகள் ஆட்டம் டிரா..!
x

Image Courtesy: @IndSuperLeague

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கோவா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதையடுத்து இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை - கோவா அணிகள் மோதின.

போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றாலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி 0-0 என டிராவில் முடிந்தது.

நடப்பு தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கோவா அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 டிரா கண்டு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதே வேளையில் மும்பை அணி 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 3 டிரா கண்டு புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.


Next Story