உலக கோப்பை ஆக்கி பாகிஸ்தான் அணி பங்கேற்பு


உலக கோப்பை ஆக்கி பாகிஸ்தான் அணி பங்கேற்பு
x
தினத்தந்தி 15 Feb 2018 8:48 PM GMT (Updated: 15 Feb 2018 8:48 PM GMT)

14–வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நவம்பர் 28–ந் தேதி முதல் டிசம்பர் 16–ந் தேதி வரை நடக்கிறது.

புவனேஸ்வரம்,

14–வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நவம்பர் 28–ந் தேதி முதல் டிசம்பர் 16–ந் தேதி வரை நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த (2014) உலக கோப்பை ஆக்கி போட்டிக்கு தகுதி பெறாத 4 முறை சாம்பியனான பாகிஸ்தான் அணி, லண்டனில் நடந்த உலக ஆக்கி லீக் அரை இறுதி சுற்றில் 7–வது இடம் பிடித்ததுடன், ஐரோப்பிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி முடிவுகள் அந்த அணிக்கு சாதகமாக முடிந்ததாலும் 13–வது அணியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் தகுதி பெற்று பங்கேற்க இருப்பதால் உலக கோப்பை போட்டி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது. பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக நெதர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகள் 3 முறை உலக கோப்பையை உச்சி முகர்ந்துள்ளன. இந்திய அணி ஒரே ஒரு முறை (1975–ம் ஆண்டு) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது.


Next Story