ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா–பாகிஸ்தான்


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா–பாகிஸ்தான்
x
தினத்தந்தி 28 Oct 2018 9:15 PM GMT (Updated: 28 Oct 2018 8:49 PM GMT)

5–வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.

மஸ்கட், 

5–வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி 3–2 என்ற கோல் கணக்கில் ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியில் குர்ஜந்த் சிங், சிங்லென்சனா சிங், தில்பிரீத்சிங் ஆகியோர் கோல் போட்டனர்.

முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான்–மலேசியா அணிகள் இடையிலான மற்றொரு பரபரப்பான அரைஇறுதி ஆட்டம் வழக்கமான நேரத்தில் 4–4 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. இதையடுத்து வெற்றி–தோல்வியை நிர்ணயிக்க கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்–அவுட்டில் பாகிஸ்தான் அணி 3–1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை சாய்த்து இறுதி சுற்றை எட்டியது.

மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக இவ்விரு அணிகளும் சந்தித்த லீக்கில் இந்திய அணி 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story