மகளிர் ஹாக்கி புரோ லீக் :இந்தியா - ஸ்பெயின் அணிகள் தேர்வு


மகளிர் ஹாக்கி புரோ லீக் :இந்தியா - ஸ்பெயின் அணிகள் தேர்வு
x
தினத்தந்தி 8 Oct 2021 10:54 AM GMT (Updated: 8 Oct 2021 10:54 AM GMT)

மாற்று அணிகளாக தரவரிசையில் அடுத்து இருக்கும் இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள் தேர்வாகியுள்ளது

சுவிட்சர்லாந்து  

மகளிர் எப்.ஐ.எச்  ஹாக்கி புரோ லீக்கின் மூன்றாவது சீசன் அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்கி அடுத்த வருடம் ஜூன் மாதம் முடிவடைகிறது .இதன் தொடக்க போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான நெதர்லாந்து அணி பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது .

இந்த தொடரில்  விளையாடுவதிலிருந்து  ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து  மகளிர் ஹாக்கி அணி விலகியுள்ளது. இதனால் மாற்று அணிகளாக தரவரிசையில் அடுத்து இருக்கும்   இந்தியா மற்றும் ஸ்பெயின் அணிகள்  தேர்வாகியுள்ளன.

இது குறித்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள  அறிக்கையில்  கூறியிருப்பதாவது :

"இந்தியா மற்றும் ஸ்பெயின்  மகளிர் ஹாக்கி அணிகள் இந்த வருடம் எப்.ஐ.எச்  ஹாக்கி புரோ லீக்கின் மூன்றாவது சீசனில் பங்குபெறும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து  மகளிர் ஹாக்கி அணிகளுக்கு மாற்றாக இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எப்.ஐ.எச்  ஹாக்கி புரோ லீக்கின் நாளாவது சீசனில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் "
 
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story