நான்கு நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆக்கி தொடர்; தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி


நான்கு நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆக்கி தொடர்; தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
x

image courtesy; twitter/@TheHockeyIndia

தினத்தந்தி 18 Aug 2023 12:15 PM GMT (Updated: 19 Aug 2023 4:20 AM GMT)

இந்த தொடரில் இந்திய அணி ஸ்பெயினை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பெர்லின்,

ஜெர்மனியில் 4 நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் போட்டியை நடத்தும் அணியான ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் இந்திய ஆண்கள் அணி தனது முதல் போட்டியில் ஸ்பெயினுடன் இன்று ( வெள்ளிக்கிழமை) மோதியது. இதில் முதலில் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. பின்னர் இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடி ஸ்பெயினை வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் இந்திய பெண்கள் அணி தனது முதலாவது போட்டியில் நாளை தொடரை நடத்தும் ஜெர்மனி அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.


Next Story