வாள்சண்டை வீராங்கனை பவானிதேவிக்கு ரூ.5½ லட்சம் நிதி உதவி எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


வாள்சண்டை வீராங்கனை பவானிதேவிக்கு ரூ.5½ லட்சம் நிதி உதவி எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 24 Feb 2017 10:00 PM GMT (Updated: 24 Feb 2017 7:50 PM GMT)

விளையாட்டுத் திறமைகளின் அடிப்படையில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லக் கூடிய தலைசிறந்த வீரர்–வீராங்கனைகள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

உயர்மட்டக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு அயல்நாட்டுப் பயிற்சி, அயல்நாடுகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பிற்கான செலவினம், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தேவையான இதர செலவினங்களுக்கான தொகை வழங்கப்பட்டு சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வகையில் வழி வகுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வாள் சண்டை வீராங்கனையான பவானிதேவி இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, இதுவரையில் அவருக்கு ரூ.22 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 17.11.2016 முதல் 20.11.2016 முடிய பிரான்ஸ் நாட்டின் ஓர்லின்ஸ் நகரில் நடைபெற்ற உலக கோப்பை வாள்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டமைக்காகவும், கடந்த 16.12.2016 முதல் 18.12.2016 முடிய மெக்சிகோ நாட்டின் கேன்கன் நகரில் நடைபெற்ற வாள்சண்டை கிராண்ட்ப்ரி போட்டிகளில் கலந்து கொண்டமைக்காகவும், செலவினத் தொகையாக ரூ.5½ லட்சம்

அனுமதித்து, மேற்படி தொகைக்கான காசோலையினை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பவானிதேவியின் தாயாரிடம் வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story