மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் பந்தயம் சென்னையில் நாளை நடக்கிறது


மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் பந்தயம் சென்னையில் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 8 Sep 2017 6:50 PM GMT (Updated: 8 Sep 2017 6:50 PM GMT)

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் பந்தயம் நடத்தப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மாவட்ட பிரிவு சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் பந்தயம் நடத்தப்படுகிறது. 13, 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கான இந்த போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை காலை 7 மணிக்கு நடக்கிறது. மாவட்ட அளவிலான இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் இந்தியாவில் தயாரான சைக்கிளையே பயன்படுத்த வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் சைக்கிள் மற்றும் வயது சான்றிதழுடன் வர வேண்டும். இதில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இந்த தகவலை சென்னை மாவட்ட விளையாட்டு அதிகாரி கே.பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story