சென்னை வீரர் தங்கப்பதக்கம் வென்றார்


சென்னை வீரர் தங்கப்பதக்கம் வென்றார்
x
தினத்தந்தி 15 Dec 2017 11:30 PM GMT (Updated: 15 Dec 2017 8:55 PM GMT)

அகில இந்திய பல்கலைக்கழக தடகளம்: சென்னை வீரர் தங்கப்பதக்கம் வென்றார்

சென்னை,

நாகர்ஜூனா பல்கலைக்கழகம் சார்பில் 78-வது அகில இந்திய பல்கலைக்கழக தடகள போட்டி ஆந்திராவில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளில் நடந்த ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் சென்னை பல்கலைக்கழக வீரர் பி.எஸ்.விஷ்ணு 7.68 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். தங்கப்பதக்கம் வென்ற விஷ்ணு சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தலைமை பயிற்சியாளரும், சுங்க இலாகா சூப்பிரண்டுமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர் ஆவார்.

Next Story