பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு துளிகள் + "||" + Asian Games Drops

ஆசிய விளையாட்டு துளிகள்

ஆசிய விளையாட்டு துளிகள்
ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான நீச்சல் போட்டியில் சீனாவின் லு ஸியாங் உலக சாதனை படைத்தார்.

* ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா இருவரும் ரெயில்வேயில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு ‘கெசட்டெட்’ அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்படும் என்று ரெயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான நீச்சல் 50 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவில் சீனாவின் லு ஸியாங் 26.98 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன்பு சீனாவின் ஜாவ் ஜிங் 2009-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் 27.06 வினாடிகளில் இலக்கை எட்டியதே உலக சாதனையாக இருந்தது.

* ஆசிய விளையாட்டுகளில் பதக்கம் வெல்லும் இந்தோனேஷிய வீரர், வீராங்கனைகளுக்கு வேலை வாய்ப்பு, வீடு மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

* இந்தோனேஷியாவில் ஒரு தம்பதி தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ‘ஆசியன் கேம்ப்ஸ்’ என்று வித்தியாசமான பெயர் சூட்டியுள்ளனர்.