இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம்


இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம்
x
தினத்தந்தி 14 Oct 2018 10:00 PM GMT (Updated: 2018-10-15T02:13:43+05:30)

3–வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது.

பியூனஸ் அயர்ஸ், 

3–வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான மல்யுத்தத்தில் 43 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சிம்ரன், அமெரிக்காவின் எமிலி ஷில்சனுடன் மோதினார். விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் சிம்ரன் 6–11 என்ற புள்ளி கணக்கில் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்தியாவின் 8–வது பதக்கம் இதுவாகும். ஆக்கி போட்டியில் இரு பாலரிலும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருக்கிறது.


Next Story