பிற விளையாட்டு

புரோ கபடி: குஜராத்தை வீழ்த்தியது அரியானா + "||" + Pro Kabaddi: Haryana beat Gujarat

புரோ கபடி: குஜராத்தை வீழ்த்தியது அரியானா

புரோ கபடி: குஜராத்தை வீழ்த்தியது அரியானா
புரோ கபடி போட்டியில், குஜராத்தை 41-24 என்ற புள்ளி கணக்கில் அரியானா அணி வீழ்த்தியது.
புதுடெல்லி,

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 62-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அரியானா, எதிரணியை 3 முறை ஆல்-அவுட் செய்து மிரள வைத்தது. முடிவில் அரியானா அணி 41-24 என்ற புள்ளி கணக்கில் குஜராத்தை தோற்கடித்து 7-வது வெற்றியை சுவைத்தது. 11-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத்துக்கு இது 7-வது தோல்வியாகும்.


மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 40-24 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் மும்பையை வீழ்த்தி 8-வது வெற்றியோடு புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இதே மைதானத்தில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - தமிழ் தலைவாஸ் (இரவு 7.30) அணிகள் சந்திக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ‘மஹா’ புயல் வலுவிழந்தது: குஜராத்துக்கு ஆபத்து நீங்கியது
மஹா புயல் வலுவிழந்துள்ளதால் குஜராத்துக்கு வந்த ஆபத்து நீங்கியுள்ளது.
2. நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்
தொழிலதிபர் நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்தது.
3. திசை மாறுகிறது: ‘மஹா’ புயல் 6-ந் தேதி குஜராத்தை தாக்குகிறது
குஜராத் மாநிலத்தை வருகிற 6-ந் தேதி ‘மஹா’ புயல் தாக்கும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்து உள்ளது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தியது ஐதராபாத்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கேரளா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணி வீழ்த்தியது.
5. பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் இல்லை - துஷ்யந்த் சவுதாலா
பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று அரியானாவில் கிங்மேக்கராக உருவெடுத்துள்ள துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.