மல்யுத்த தரவரிசையில் தீபக் பூனியா முதலிடத்திற்கு முன்னேற்றம்


மல்யுத்த தரவரிசையில் தீபக் பூனியா முதலிடத்திற்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 27 Sep 2019 11:04 PM GMT (Updated: 27 Sep 2019 11:04 PM GMT)

மல்யுத்த தரவரிசையில் தீபக் பூனியா முதலிடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச மல்யுத்த சம்மேளனம், வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. சமீபத்தில் உலக மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றி சாதனை படைத்த இந்திய வீரர் தீபக் பூனியா, பிரீஸ்டைல் 86 கிலோ உடல் எடைப்பிரிவின் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரை விட 4 புள்ளி பின்தங்கிய உலக சாம்பியன் ஹசன் அலியாஜாம் யாஸ்டானி (ஈரான்) 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

வெண்கலம் வென்ற இந்தியாவின் பஜ்ரங் பூனியா 65 கிலோ எடைப்பிரிவில் முதலிடத்தை இழந்து 2-வது இடத்திற்கு இறங்கியுள்ளார். இந்த பிரிவின் உலக சாம்பியனான காட்ஸிமுராத் ரஷிடோவ் (ரஷியா) ‘நம்பர் ஒன்’ இடத்தை பெற்றுள்ளார்.


Next Story