பிற விளையாட்டு

தேசிய இளையோர் விளையாட்டு: நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் சரண் தங்கம் வென்றார் + "||" + National Youth Games: Tmailnadu player Charan won the gold in the long jump

தேசிய இளையோர் விளையாட்டு: நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் சரண் தங்கம் வென்றார்

தேசிய இளையோர் விளையாட்டு: நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் சரண் தங்கம் வென்றார்
தேசிய இளையோர் விளையாட்டு போட்டியின், நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் சரண் தங்கம் வென்றார்.
கவுகாத்தி,

3-வது கேலோ இந்தியா தேசிய இளையோர் விளையாட்டு போட்டிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 21 வயதுக்கு உட்பட்ட பிரிவு நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் சரண் 7.41 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அவர் தனது கடைசி வாய்ப்பில் அபாரமாக தாண்டி முதலிடத்தை சொந்தமாக்கினார். அரியானா வீரர் பூபிந்தர் சிங் 7.30 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், கேரளா வீரர் சஜன் 7.29 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினார்கள்.