முன்னாள் தடகள வீரர் மில்காசிங் ‘டிஸ்சார்ஜ்’


முன்னாள் தடகள வீரர் மில்காசிங் ‘டிஸ்சார்ஜ்’
x
தினத்தந்தி 30 May 2021 11:15 PM GMT (Updated: 30 May 2021 11:16 PM GMT)

இந்திய தடகள ஜாம்பவான்களில் ஒருவரான 91 வயதான மில்கா சிங் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து மொகாலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதால் அவரை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும்படி அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி நிர்மல் கவுருக்கு தொடர்ந்து அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Next Story