இந்தியன் ஸ்குவாஷ் தொடர்: சென்னை வீரர் வேலவன் செந்தில்குமார் ‘சாம்பியன்’


இந்தியன் ஸ்குவாஷ் தொடர்: சென்னை வீரர் வேலவன் செந்தில்குமார் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 26 Aug 2021 10:53 PM GMT (Updated: 26 Aug 2021 10:53 PM GMT)

இந்தியன் ஸ்குவாஷ் தொடரில் சென்னை வீரர் வேலவன் செந்தில்குமார் வெற்றி பெற்றனர்.

சென்னை, 

புரபொசனல் ஸ்குவாஷ் சங்கத்தின் இந்தியன் ஸ்குவாஷ் தொடர் சென்னையில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் சென்னை வீரர் வேலவன் செந்தில்குமார் 11-7, 11-8, 11-5 என்ற நேர்செட்டில் மும்பை வீரர் அபிஷேக் பிராதனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் டெல்லி வீராங்கனை தன்வி கன்னா 11-5, 9-11, 7-11, 11-7, 15-13 என்ற செட் கணக்கில் சென்னையை சேர்ந்த சுனைனா குருவில்லாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். பரிசளிப்பு விழாவில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவன நிர்வாகி அருண் ராஜேந்திரன், இந்திய ஸ்குவாஷ் சம்மேளன பொதுச்செயலாளர் சைரஸ் போஞ்சா ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.

Next Story