தேசிய ரேலி சாம்பியன்ஷிப் : ஐஸ்வர்யா பிஸ்ஸேவுக்கு 3 வது வெற்றி

உலக அளவில் மோட்டார் பந்தய விளையாட்டில் பட்டம் வென்ற முதல் இந்திய மோட்டார் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையும் இவரையே சேரும்.
கர்நாடகா
இருசக்கர வாகனங்களுக்கான தேசிய ரேலி சாம்பியன்ஷிப் 2021 கர்நாடகாவின் புத்தூர் அருகே நேற்று நடைபெற்றது. நேற்று நடந்த 3 வது சுற்றில் நடப்பு சாம்பியன் ஐஸ்வர்யா பிஸ்ஸே இந்த தொடரில் தொடர்ச்சியாக தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தார்.
மொத்தம் 6 சுற்றுகள் உள்ள இந்த ரேலி சாம்பியன்ஷிப் தொடரில் இன்னும் 3 சுற்றுகள் மீதமுள்ளது. 6 சுற்றுகளின் முடிவில் அதிக புள்ளியை பெற்று இருப்பவர் இந்த தொடரின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
26 வயதான ஐஸ்வர்யா பிஸ்ஸே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். ஏற்கனவே இவர் 6 முறை தேசிய ரேலி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுள்ளார். மேலும் உலக அளவில் மோட்டார் பந்தய விளையாட்டில் பட்டம் வென்ற முதல் இந்திய மோட்டார் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையும் இவரையே சேரும்.
நேற்றைய வெற்றிக்கு பின் ஐஸ்வர்யா பிஸ்ஸே கூறியதாவது :
முதலில் எனது அணிக்கு நன்றி கூற விரும்புகிறேன்.இந்த நிலப்பரப்பு சவாலானது. இது தேசிய பேரணிக்கு நல்லது. ஏனெனில் இதுபோன்ற கடினமான நிலப்பரப்பு மட்டுமே கடினமான சர்வதேச பேரணிகளுக்கு இந்தியர்களை தயார்படுத்தும்.
இவ்வாறு ஆவார் கூறினார்.
இந்த தொடரின் மீதமுள்ள சுற்றுகள் கோயம்பத்தூர் , நாசிக் , சிக்மகளூர் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது.
Related Tags :
Next Story