சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்: வரும் 4-ம் தேதி தொடக்கம்


சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்:  வரும் 4-ம் தேதி தொடக்கம்
x

கோப்புப்படம்

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி வரும் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏடிபி சேலஞ்சர் போட்டிகள் சென்னையில் நடத்தப்படுவது இது 6-வது முறையாகும்.

இந்த தொடரில் 14 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள். இந்தியாவின் நம்பர் 2 வீரரான ராம்குமார் ராமநாதன், செக் குடியரசின் நிகோலோஸ் பாஷில்லாஷ்விலி ஆகியோருக்கு 'வைல்டு கார்டு' வழங்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களான முகுந்த் சசிகுமார், சித்தார்த் விஸ்வகர்மா, மணீஷ் சுரேஷ்குமார் ஆகியோரும் களமிறங்குகின்றனர்.

4-ம் தேதி தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தொடர்ந்து 5-ம் தேதி பிரதான சுற்று தொடங்குகிறது.10-ம் தேதி இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியும், 11-ம் தேதி ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியும் நடக்கிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.10 கோடி ஆகும்.


Next Story