அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச்சை எதிர்கொள்ளவிருக்கும் இளம் வீரர்.!


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச்சை எதிர்கொள்ளவிருக்கும் இளம் வீரர்.!
x
தினத்தந்தி 7 Sep 2023 6:12 PM GMT (Updated: 7 Sep 2023 6:44 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில், தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் அல்கரஸ், ஜோகோவிச், டேனியல் முதலிய ஸ்டார் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இந்த வரிசையில் தரவரிசையிலேயே இல்லாத ஒரு இளம் வீரரான (20 வயது) அமெரிக்காவின் பென் ஷெல்டன் அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதும் அவர் அரையிறுதியில் எதிர்கொண்டு மோதவிருப்பது அவருடைய வயதின் எண்ணிக்கையைத் தாண்டி (23 முறை) கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஜாம்பவான் ஜோகோவிச்சை (நாளை மறுநாள்) எதிர்த்து.

இந்நிலையில் 2003க்கு பிறகு கோப்பையே வெல்லாத தன்னுடைய நாட்டின் கனவுக்காக பென் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு டென்னிஸ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


Next Story