இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இலங்கை பந்துவீச்சு தேர்வு..!


இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இலங்கை பந்துவீச்சு தேர்வு..!
x
தினத்தந்தி 24 Feb 2022 7:27 PM IST (Updated: 24 Feb 2022 7:27 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா - இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேசம் தலைநகர் லக்னோவில் தொடங்கியது.

லக்னோ,

மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று தொடங்கி உள்ளது.

இந்திய அணி தொடர்ச்சியாக ஒன்பது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் சமீபத்தில் வெஸ்ட் இண்டீசை 3-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்ததும் அடங்கும். உள்ளூரில் களம் இறங்குவதால் இந்தியாவின் கை ஓங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 இருபது ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் இந்தியாவும், 7-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இரவில் பனிப்பொழிவு காரணமாக பந்து வீசுவதற்கு கடினமாக இருக்கும். இதனால் ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். 

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, வெங்கடேஷ் அய்யர், ரவீந்திர ஜடேஜா,  ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை: பதும் நிசாங்கா, கமில் மிஷாரா, சாரித் அசலன்கா, தினேஷ் சன்டிமால், ஜனித் லியானாஜ், தசுன் ஷனகா (கேப்டன்), சமிகா கருணாரத்னே,  துஷ்மந்தா சமீரா, லாகிரு குமாரா, ஜெப்ரி, பிரவீன் ஜெயவிக்ரமா.

இந்த நிலையில் இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Next Story