தெலுங்கு பட உலகில் வரலட்சுமி சரத்குமார்

தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார், அங்கே புகழின் உச்சத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார்.;

Update:2022-03-13 15:09 IST
வரலட்சுமி சரத்குமாரிடம் தமிழ் படங்களைப்போல் தெலுங்கு படங்களும் கை நிறைய உள்ளன. அதில் தமிழ் படங்களை விட, தெலுங்கு படங்கள் அதிகம். தெலுங்கு பட உலகிலும் சரி, ரசிகர்கள் மத்தியிலும் சரி, அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.அவர் நடித்த ‘கிராக், ’ ‘நந்தி’ ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதை அவர் பயன்படுத்திக்கொண்டு நிறைய தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். சென்னையை விட ஐதராபாத்தில் அதிக நேரங்களை செலவிடுகிறார்.

சென்னைக்கும், ஐதராபாத்துக்கும் அடிக்கடி பறந்து கொண்டிருப்பதை தவிர்க்கவும், ஓட்டல்களில் தங்குவதை தவிர்க்கவும், ஐதராபாத்திலேயே ஒரு வீடு எடுத்து தங்க முடிவு செய்து இருக்கிறாராம்.

இதுபற்றி வரலட்சுமி கூறும்போது, ‘‘இது என் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம். நான் ஐதராபாத்தில் வசிக்கப் போகிறேன்’’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் செய்திகள்