“வா வாத்தியார்” ஏமாற்றத்தை கொடுக்காத படமாக இருக்கும் - இயக்குநர் நலன் குமாரசாமி

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.;

Update:2026-01-12 14:50 IST

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘வா வாத்தியார்’. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ‘வா வாத்தியார்’ படம் கடந்த மாதமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் சந்தித்த நிதி வழக்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ திரைப்படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நேர்காணலில் பேசிய இயக்குநர் நலன் குமாரசாமி, “வா வாத்தியார், நரன் குமாரசாமி திரைப்படங்கள் என பாராட்டுபவர்களுக்கான திரைப்படமாக இருக்காது. அதேநேரம், என் மெனக்கெடல்களை வேறு வழியில் செலுத்தியிருப்பதால் ஏமாற்றத்தைக் கொடுக்காத படமாகவும் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்