ஓ.டி.டி. தளத்தில் ரூ.20 கோடிக்கு விலை போன கார்த்தி படம்

கார்த்தி நடித்த சர்தார் படம் திரைக்கு வரும் முன்பே தியேட்டர் வெளியீட்டுக்கு பிந்தைய ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதற்கான உரிமை ரூ.20 கோடிக்கு விலை போய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2022-03-17 15:58 IST
கார்த்தி நடிப்பில் சுல்தான் படம் கடந்த வருடம் வந்தது. தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கும் விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

தற்போது எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும், வயதான தோற்றத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவரது தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

நாயகிகளாக ராஷி கன்னா, மலையாள நடிகை ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், சர்தார் படம் திரைக்கு வரும் முன்பே தியேட்டர் வெளியீட்டுக்கு பிந்தைய ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதற்கான உரிமை ரூ.20 கோடிக்கு விலை போய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளுக்கும் சேர்த்து இந்த தொகைக்கு விற்று இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்