’நம்பிக்கையே போச்சு’...- நடிகர் மாகாபா ஆனந்த் குமுறல்

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் மாகாபா ஆனந்த்.;

Update:2025-12-30 17:08 IST

சென்னை,

தமிழ்த் திரைப்பட நடிகராகவும், பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருபவர் மாகாபா ஆனந்த்.

இந்நிலையில் மாகாபா ஆனந்த் தனது காருக்கு ஒரு பிரபல நிறுவனத்தின் பங்கில் டீசல் போட்டிருக்கிறார். ஆனால் அந்த டீசலில் தண்ணீர் கலந்து இருந்திருக்கிறது. அதனால் அவரது சொகுசு கார் பழுது ஏற்பட்டு இருப்பதாக மாகாபா ஆனந்த் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில், "டீசல்ல தண்ணி கலந்ததால கார் ரிப்பேராகி 3 லட்சம் செலவாகிடுச்சு. இத ஆதாரத்தோட நிரூபிச்சதும் கோர்ட்டுக்கு போயிடாதீங்க, 80 ஆயிரம் தர்றோம்னு பேரம் பேசுறாங்க. உங்கள நம்பி தான் வர்றோம். ஆனா இப்படி பண்ணா டீசலையும் இனி மக்களே தயாரிக்கணுமா? இந்த பங்க் மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு.."என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்