நடிகை அனுமோல் பகிர்ந்த வெற்றியின் ரகசியம்

என் நடிப்பு எனக்கே பிடிக்காது என்று நடிகை அனுமோல் கூறியுள்ளார்.;

Update:2025-12-30 21:17 IST

கோப்புப்படம் 

‘சூரன்', ‘திலகர்', ‘ஒருநாள் இரவில்', ‘பர்ஹானா', ‘ஹரா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை அனுமோல். ‘அயலி', ‘ஹார்ட் பீட்' போன்ற வெப் தொடர்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனுமோலிடம், ‘உங்களது வெற்றியின் ரகசியம் என்ன?' என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அனுமோல் "உண்மையாக சொல்லப்போனால் என் நடிப்பு எனக்கே பிடிக்காது. ஒவ்வொரு படத்தையும் பார்த்துவிட்டு, இன்னும் நன்றாக நடித்திருக்கலாமே என எனக்குள் நானே சொல்லிக்கொள்வேன்.

நான் இன்னும் நன்றாக நடிக்கவேண்டும் என்பதே எனக்காக நானே சொல்லிக்கொள்ளும் மந்திரம். அதுவே என் வெற்றியின் ரகசியமாக நினைக்கிறேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்