உத்தரப்பிரதேச துணை முதல்-மந்திரியுடன் 'ஜெயிலர்' படம் பார்த்த நடிகர் ரஜினி

நடிகர் ரஜினி உத்தரப்பிரதேச மாநில துணை முதல்-மந்திரி கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்துள்ளார்

Update: 2023-08-19 11:39 GMT

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினி ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமம், பத்ரிநாத் கோவில் போன்ற பல இடங்களுக்கு சென்றார்.

தொடர்ந்து, ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப்பிரதேச கவர்னர் ஆனந்தி பென் ஆகியோரை சந்தித்தார். இந்நிலையில், நடிகர் ரஜினி உத்தரப்பிரதேச மாநில துணை முதல்-மந்திரி கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் 'ஜெயிலர்' திரைப்படம் பார்த்துள்ளார். இவர்களுடன் லதா ரஜினிகாந்தும் இருந்தார். நடிகர் ரஜினி நாளை அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்