'வெப்பம் குளிர் மழை ' படத்தின் முதல் பாடலான 'டமக்கு டமக்கா' வெளியீடு

சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீநிஷா ஜெயசீலன் வெப்பம் குளிர் மழை படத்தின் முதல் பாடலான 'டமக்கு டமக்கா' பாடலை பாடியுள்ளார்.;

Update:2024-03-19 17:29 IST

தயாரிப்பாளர் திரவ், இஸ்மத் பானு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வெப்பம் குளிர் மழை'. அறிமுக இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து இப்படத்தை இயக்குகிறார். புதிய இசையமைப்பாளர் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைக்க FDFS என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றி மாறன் வெளியிட்ட நிலையில் இப்பொழுது அப்படத்தின் முதல் பாடலான 'டமக்கு டமக்கா' வெளியாகியுள்ளது. சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இப்பாடலை பாடியுள்ளார்.

அறிமுக நடிகர்களான திரவ் மற்றும் இஸ்மத் பானு இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இத்திரைப்படம் திருமணமான தம்பதிகள் சந்திக்கும் இன்றைய சவால்களை மையமாகக் கொண்டது மற்றும் அதில் உருவாகும் சமூகத் தாக்கங்கள் மன, உடல் ரீதியாக உறுதியற்றத் தன்மைகளை எப்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு உருவாக்குகின்றன என்றும் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்