’அவர்கள் பட்ட கஷ்டத்தை படமாக எடுக்கிறார்கள்...என்ன தவறு?’- நடிகர் சரத்குமார்

மாரி செல்வராஜை சிறந்த இயக்குனர் என்று சரத்குமார் பாராட்டினார்.;

Update:2025-12-22 14:04 IST

சென்னை,

நடிகர் சரத்குமார் தற்போது கொம்புசீவி படத்தில் நடித்துள்ளார். சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ஒரு பேட்டியில் பேசிய சரத்குமார் , மாரி செல்வராஜை சிறந்த இயக்குனர் என்று பாராட்டினார். அவர் பேசுகையில்,

’மாரி செல்வராஜும், பா.ரஞ்சித்தும் சாதி சார்ந்த படங்களை எடுப்பதாகவே சிலர் சொல்கிறார்கள். ஹாலிவுட்டிலும் யூதர்கள் என்ன செய்தார்கள்? கறுப்பின மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை படமாக இன்னும் எடுத்து வருகின்றனர். வலியைதான் படமாக காட்டுகிறார்கள். மக்களின் வலியை உங்களால் அழிக்க முடியாது. நீங்கள் ஏன் இப்படி படம் எடுக்கிறீர்கள் என யாரும் கேட்க கூடாது.

அவர்கள் பட்ட கஷ்டத்தை படமாக எடுக்கிறார்கள். அதை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். மாரிசெல்வராஜ் ஒரு சிறந்த இயக்குநர்'என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்