சிகிச்சை முடிந்து இயக்குனர் பாரதிராஜா வீடு திரும்பினார்
மருத்துவமனையில் இருந்து இயக்குனர் பாரதிராஜா இன்று மாலை வீடு திரும்பினார்.;
சென்னை,
இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் திடீரென நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தி.நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார் . அங்கு அவர் தொடரந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து இயக்குனர் பாரதிராஜா இன்று மாலை வீடு திரும்பினார்.