ஸ்ரீகாந்த் நடித்துள்ள "தி பெட்" படத்தின் டிரெய்லர் வெளியானது
கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஜனவரி மாதம் 2ந் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் ஸ்ரீகாந்த். இவர் ‘வெத்து வேட்டு’, ‘பரிவர்த்தனை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.மணிபாரதி இயக்கத்தில் தி பெட் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.
மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீநிதி புரொடக் ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.
கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஜனவரி மாதம் 2ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் படத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.