மோகனின் 'ஹரா' படத்தின் டிரெயிலர் வெளியீடு

மோகன் நடித்த 'ஹரா' படம் ஜூன் 7 -ந் தேதி தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2024-05-25 16:01 GMT

சென்னை,

'மூடுபனி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன். இந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, 100- வது நாள் என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சிறிது காலம் தனது நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்த மோகன், தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

80- 90 ம் ஆண்டுகளில் புகழின் உச்சியில் இருந்த இவர் ராதா, நதியா, ராதிகா, அமலா, ரேவதி, நளினி உள்ளிட்ட நடிகைகளுடன் பல படங்களில் நடித்தார். ரேவதியுடன் நடித்த 'மெளன ராகம்' படத்தின் பாடல்கள் மோகனுக்கு பெரும் பெயர் பெற்று தந்தது.

இந்நிலையில் நீண்ட காலமாக சினிமாவில் ஒதுங்கி இருந்த மோகன் தற்போது 'ஹரா' என்ற ஒரு புதுப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி உள்ளார். இந்த படத்தில் சாருஹாசன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வருகிற ஜூன் 7 -ந் தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. நீண்ட காலங்களாக இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வந்த சூழலில் கடந்த மாதத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் டிரெயிலர் மிரட்டலான அளவில் வெளியாகியுள்ளது.

தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு ஆக்சன் திரில்லர் ஜானரில் ஹரா படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்