போதைப்பொருள் வழக்கில் கைதான திரைப்பட தயாரிப்பாளரிடம் போலீசார் தீவிர விசாரணை

சர்புதீனை திருமங்கலம் போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-12-06 11:38 IST

சென்னை,

கடந்த 2021ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான படம் 'ஈஸ்வரன்'. இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் சர்புதீனை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஓஜி கஞ்சா வழக்கில் கைது செய்துள்ளனர். இவருடன் சேர்த்து சீனிவாசன், சரத் என்ற 3 பேரையும் சென்னை போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்துள்ளனர்.

சர்புதீன் வீட்டில் வார இறுதியில் நடைபெறும் பார்ட்டியில் கொக்கெய்ன், மெத்தம்பெட்டமைன், ஓஜி கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக கைது செய்யப்பட்டார். மேலும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து 27 லட்சம் ரூபாய் பணம், மூன்று ஆப்பிள் ஐபோன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதான திரைப்பட இணை தயாரிப்பாளர் சர்புதீனை திருமங்கலம் போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் திரை உலகில் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளார் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்