2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'பகாசூரன்' டிரைலர்

டிரைலர் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதுஇந்த போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.;

Update:2022-12-11 23:04 IST

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு சாம்.சிஎஸ்  இசையமைக்கிறார். 'பகாசூரன்'  படத்தின்  படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் 2 மில்லியன்  பார்வையாளர்களை கடந்துள்ளது.    

Tags:    

மேலும் செய்திகள்