ஆர்யா நடிக்கும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆர்யா நடிக்கும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-05-14 03:36 IST

சென்னை,

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இந்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கிறார்.

ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்