‘விஜய்யின் நடனத்தை திரையில் மிஸ் செய்வோம்’ - நமீதா

நடிகர்களிலேயே விஜய்தான் மிகச்சிறந்த நடனக்கலைஞர் என நமீதா தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-24 21:44 IST

தேனி,

தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான நமீதா கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் அரசியலுக்கு வந்த பிறகு நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவது குறித்து தனது கருத்துகளை தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது;-

“நடிகர் விஜய்யைப் போல் மிக அழகான நடனம் ஆடக்கூடியவர்கள் மிகவும் குறைவுதான். நடனக் கலைஞர் பிரபுதேவா, தெலுங்கு சினிமாவில் ஜூனியர் என்.டி.ஆர்., அதே போல் நமது தமிழ் சினிமாவில் இருப்பவர் விஜய். என்னைப் பொறுத்தவரை நடிகர்களிலேயே அவர்தான் மிகச்சிறந்த நடனக்கலைஞர். அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு அவர் விலகினால், நிச்சயமாக திரையில் அவரது நடிப்பு, நடனம் அனைத்தையும் மிஸ் செய்வோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்