'துணிவு' பட நடிகர் ரித்துராஜ் சிங் மாரடைப்பால் மரணம்; திரைத்துறையினர் இரங்கல்

இந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரித்துராஜ் சிங்.;

Update:2024-02-20 15:29 IST

Image Courtesy: Twitter / @rameshofficial0

மும்பை,

இந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரித்துராஜ் சிங். அவருக்கு வயது 59. இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், கணைய நோயால் அவதிப்பட்டு வந்த ரித்துராஜ் சிங், சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு ரித்துராஜ் சிங் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அவரது மறைவு பாலிவுட் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சோனு சூட், விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட பிரபலங்கள் ரித்துராஜ் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்