விஷால் நடித்துள்ள 'லத்தி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் விஷால் நடித்துள்ள 'லத்தி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2022-11-19 21:53 IST

சென்னை,

அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'லத்தி'. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். ராணா புரொடக்சன் சார்பில் ரமணா மற்றும் நந்தா தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். எம். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஊஞ்சல் மனம் ஆடுமே' வெளியாகி கவனம் பெற்றது. முதலில் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், லத்தி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'லத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ம் தேதி கிறிஸ்துமசை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்