செல்வராகவன் டைரக்‌ஷ னில் சூர்யா ஜோடியாக ரகுல் பிரீத்சிங்!

டைரக்டர் செல்வராகவன் தற்போது, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கி முடித்து இருக்கிறார்.;

Update:2017-03-03 12:21 IST
செல்வராகவன் டைரக்‌ஷ னில் சூர்யா ஜோடியாக ரகுல் பிரீத்சிங்!
விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை அடுத்து செல்வராகவன், சூர்யா நடிக்கும் ஒரு புதிய படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இதில், சூர்யா ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடிக்கிறார்.

சூர்யா இப்போது, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். விக்னேஷ் சிவன் டைரக்டு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. இதையடுத்து, ஏப்ரல் அல்லது மே மாதம், செல்வராகவன் டைரக்‌ஷனில் சூர்யா நடிக்கும் படம் தொடங்கும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்