புதிய சாதனை படைத்த சலார் டிரைலர்

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள திரைப்படம் 'சலார்'. இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.;

Update:2023-12-03 23:29 IST

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'சலார்' படத்தின் டிரைலர் வெளியான 18 மணிநேரத்திற்குள் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதற்கு முன்பு 'சலார்' டீசரும் இதுபோன்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்