ஜாக்கி சானின் ' தி ஷேடோஸ் எட்ஜ்' படப்பிடிப்பு நிறைவு

ரைட் ஆன் படத்தை இயக்கிய லாரி யாங் இயக்கத்தில் ’ தி ஷேடோஸ் எட்ஜ்’ என்ற படத்தில் ஜாக்கி சான் நடித்திருக்கிறார்.;

Update:2025-01-28 08:09 IST

சென்னை,

90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். அவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடிப்பில் கடந்த 2010ல் வெளியான கராத்தே கிட்டிற்கு பல ரசிகர்கள் உள்ளனர். 359 மில்லியன் டாலர் வசூலை ஈட்டிய இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

ஜாக்கி சான் கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு வெளியான ரைட் ஆன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஜப்பானில் அதிக வசூல் செய்த சீனத் திரைப்படமாகவும், 2023-ல் மலேசியாவில் அதிக வசூல் செய்த சீன படங்களில் டாப் 3 இடத்தையும் பிடித்தது.

தற்போது மீண்டும் ரைட் ஆன் படத்தை இயக்கிய லாரி யாங் இயக்கத்தில் ' தி ஷேடோஸ் எட்ஜ்' என்ற படத்தில் ஜாக்கி சான் நடித்திருக்கிறார். மேலும் இதில், ஜாங் ஜி பெங், டோனி லியுங் கா-பை மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி வரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்