‘ஹாட்ரிக்’ அடிக்க தயாராகும் அட்லி

விஜய் உடனான தனது கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்க அட்லி ஆயத்தமாகி இருக்கிறார்.;

Update:2019-09-15 03:15 IST
‘ஹாட்ரிக்’ அடிக்க தயாராகும் அட்லி
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அட்லி. இந்த படம் ரூ.50 கோடி வசூல் குவித்தது.

அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்தார், அட்லி. இதில் ‘தெறி’ படம் ரூ.150 கோடியும், ‘மெர்சல்’ படம் ரூ.250 கோடி வசூலையும் குவித்தது.

இந்தநிலையில் 3-வது முறையாக விஜயை வைத்து ‘பிகில்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தின் மூலம், விஜய் உடனான தனது கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்க அட்லி ஆயத்தமாகி இருக்கிறார். இந்த படத்திலும் மிகப்பெரிய வசூலை பெற்று பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை அட்லி பெறுவார் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

மேலும் செய்திகள்