5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தால் மாணவர்கள் மன அழுத்த‌த்தில் இருந்து விடுபடுவார்கள், அரசுக்கு நன்றி - நடிகர் த‌னுஷ்

5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தால் மாணவர்கள் மன அழுத்த‌த்தில் இருந்து விடுபடுவார்கள் என்றும் ரத்து செய்த அரசுக்கு நன்றி எனவும் நடிகர் த‌னுஷ் கூறினார்.

Update: 2020-02-05 06:59 GMT
சென்னை,

தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும், பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டினார்கள். இந்த நிலையில், கடும் எதிர்ப்புக்கு எதிரொலியாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 

இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் வரவேற்றுள்ளனர்

இந்த நிலையில், 5ஆம் மற்றும்  8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது:-

5ஆம் மற்றும்  8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது .இது குழந்தைகளுக்கு மனஅழுத்தத்திலிருந்தும் , பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியையும், சமூகத்திற்கு சமத்துவ ஆரோக்கியத்தையும் நிலைபெறச்செய்யும் . தேர்வை ரத்து செய்த அரசுக்கு நன்றியையும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்