வேகமாக முன்னேறும் நாயகி!
மூன்று பெயர்களை கொண்ட கதாநாயகி, தமிழ் பட உலகில் மிக வேகமாக முன்னேறி வருகிறார். இவர் சின்ன நடிகர், பெரிய நடிகர் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை.;

அதிக சம்பளம் கேட்டு அடம் பிடிப்பதில்லை. தயாரிப்பாளர் கொடுப்பதை வாங்கிக் கொள்கிறார்.
அதனால், இந்த கதாநாயகிக்கு மார்க்கெட் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது. ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு புது பட வாய்ப்புகள் வந்து கதவை தட்டுகின்றனவாம்!