ஓ.டி.டி.யால் மோதல்; தியேட்டர்களில் ‘ஏலே' படத்தை திரையிட மறுப்பு
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ள ‘ஏலே’ படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர். வருகிற 27-ந் தேதி ஓ.டி.டி.யில் வெளியிடவும் திட்டமிட்டு இருந்தனர்.;

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் ஏலே படத்தை 30 நாட்கள் வரை ஓ.டி.டி.யில் வெளியிட மாட்டோம் என்று உத்தரவாத கடிதம் கொடுத்தால்தான் திரையிடுவோம் என்று முடிவு எடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் கடிதம் கொடுக்காததால் படத்தை திரையிடவில்லை. இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஏலே பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏலே படம் திரையரங்குகளில் வெளியாக மூன்று நாட்களே இருந்த நிலையில் சில ஆச்சரியமான புது விதிகளால் திரையரங்குக்கு கொண்டு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே இந்த படத்தை தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிட முடிவு செய்துள்ளோம்'' என்று அறிவித்து உள்ளது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.